Mother Board Repairing - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில் - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

January 02, 2014

Mother Board Repairing - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில்

வணக்கம் சகோதர சகோதரிகளே! இன்று புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதிலும் இப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எமது பக்கத்தில் எத்தனை பதிவுகள் வந்திருந்தாலும் இந்த பதிவு அப்பதிவுகளில் முற்றிலும் வேறுபட்டது என நினைக்கின்றேன். அதாவது நாம் அன்றாடம் பாவிக்கும் கணினியின் பிரதான பகுதிதான் தாய்ப்பலகை (Motherboard ).  அகவே அதைப்பற்றி சற்று பேசலாம் என நினைக்கின்றேன். தாய்ப்பலகையின் அறிமுகம் எல்லாம் தந்து பதிவை கசப்பாக்க விரும்பவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகின்றேன். நான் எடுத்துள்ள தலைப்பு தாய்ப்பலகை திருத்துதல் அதாவது Motherboard Repairing. அதற்கு தேவையான முக்கியமான டூல்தான் நல்ல பொவ்த் ஒன்று. அதாவது நாம் ஈயத்தால் இணைக்க உதவும் கருவி. 




மிக நல்லது Goot எனப்படும் Brand, அதில் 30 W இருந்தால் போதும். வேலைக்கும் பொருத்தமானது. தேவையான அடுத்த விடயம் நல்ல மல்டி மீடர் (Multi Meter). 





அடுத்தது ஹாட் வெயார் கன் (Hardware Gun). 



அவ்வளவுதான். ஆனால் அது மட்டும் போதாது. அதற்கு நல்ல மதிநுட்பம் வேண்டும். பயப்படாதிங்க அத நாமலே வர வச்சிக்கலாம். 

01. முதலில் நாம் பார்க்க இருப்பது மோபோ வகையான தாய்ப்பலகை ஆகும். பொதுவாக அனைவருக்கும் இந்த தாய்ப்பலகையைப்பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். 



 01. NORTH BRIDGE OR MEMORY CONTROLLER HUB 

இதுதான் தாய்ப்பலகை ஒன்றின் மிக பிரதான பகுதி. இதனை இணங்காணும் முறைகள் 03 உள்ளது. 

01. தாய்ப்பலகையில் உள்ள மிகப்பெரிய சிப் (Chip) இதுவாகும். 
02. பொதுவாக Heat Sink உடன் இணைக்கப்பட்டிருக்கும். 
03. CPU Socket ற்கும் RAM Slot ற்குமிடையில் காணப்படும்.  


இதனால் ஆற்றப்படும் கருமங்கள் என்னவென்று பார்ப்போமேயானால் 





 01. CPU, RAM, AGP அல்லது PCI Ex மற்றும் South Bridge ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பை பேணுதல்.

02.  On Board VGA ஆக செயற்படல்


இதன் தொழிற்பாட்டில் ஏற்படும் பிரச்சினையால் நமக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்னவென்று பார்த்தால் 

01. CPU ஐ கண்டுபிடித்தல் ( CPU இல்லாதது போலான அதன் நடத்தை )

02. On Board VGA வேலை செய்யாமை (Beep Codes), Separate VGA ஐ Detect செய்யாமை அல்லது   Separate VGA இணைத்தவுடன் On Board VGA வேலை செய்தல். 

03. RAM ஐ Detect செய்யாமை  (Beep Codes)

04. Beep சத்தம் 

05. Power On ஆகாமை


REPAIR செய்வது எப்படி?

முதல் நான்கு பிரச்சினைகளையும் Hot Gun ஐ பாவித்து அதனை சூடாக்குவதன் மூலம் திருத்திக்கொள்ளலாம். ஆனால் இதனை சரியாக செய்வதாயின் அது மிக கஷ்டமான காரியம். கஷ்டம்னா அப்புடி ஒரு கஷ்டம். 

அப்போ இத எப்டி சரி பன்றது? இதானே உங்க கேள்வி? இத சரியான விதத்துல சரி செய்ய ஒரு கருவி வேனும். அத என்னால இன்னும் வாங்க முடியல. நான் இன்னும் சின்ன பையன்தானே! பெரியவனானதும் வாங்கிடுவேன். கருவிய கீழ பார்க்கலாம். 


கீழ இருக்கிற வீடியொவ பாருங்க. அதுல இருக்கு இந்த கருவிய எப்படி பாவிக்கிறதுன்னு... 




ஐந்தாவது பிரச்சினைய தீர்க்கனும்னா கட்டாயமா இந்த மெஷின் வேனும். காரணம் என்னன்னு பார்த்தா அதுல ஏற்பட்டிருக்க Short அ Replace பன்னனும். அப்பிடி Replace பன்ன நம்பர் கட்டாயமா ஒத்துபோகனும்.

Hot Gun மூலமா Heat பன்னனுமா இருந்தா BBQ போடுற மாதிரி சூடாக்கி பயன் இல்ல. Over Heat ஆகுனா Short ஆக வாய்ப்பிருக்கு. புரியுதா??



02. SOUTH BRIDGE  (I/O CONTROLLER HUB ICH )

என்ன தலைப்பதா பார்த்துட்டீங்களே! நா என்ன சொல்றது. நாம அடுத்து பார்க்க இருக்குற விஷயம் South Bridge சரியா???

இப்ப வாற தாய்ப்பலகைகல்ல இது இல்லாம North Bridge மட்டும் இருக்கலாம். ஆனா இதுக்கு முன்னாடி வந்த நிறைய தாய்ப்பலகைகல்ல இது இருக்கு.





சில வேலைகளில் Heat Sink பாவிச்சிருப்பாங்க. இதன் தொழிற்பாடுகல தலைப்பு போட்டு தனியா பார்க்க தேவையில்ல. PCI Slots மற்றும் ,USB ,Sound chip,Lan chip,BIOS rom,Sio Chip ,sata IDE Channel ற்கிடையில தொடர்ப்பை ஏற்படுத்துதல். 

இதன் தொழிற்பாட்டுல ஏதாவது பிரச்சினை வந்தா கீழ உள்ள பிரச்சினைகள்தான் பொதுவா வரும். 

01. Mother Board Power On ஆகாமை,

02. PCI ஸ்லாட் ,USB ,Sound chip,Lan chip போன்றவை detect ஆகாமல் போதல்

03. power On அகாமல் போதல் அல்லது அடிக்கடி Restart ஆதல்.

சரி இத எப்படி சரி செய்றதுனு பார்த்தா மேல பிரச்சினைக்கு என்ன தீர்வு சொன்னேனோ அதேதான் இங்கயும் செய்ய இருக்கு. ஆனால் இதுக்கு மேலதிகமா சந்தேகங்கள் கேள்விகள் இருந்தா எனக்கிட்ட தயங்காம கேளுங்க. நான் அதப்பத்தி இந்த பதிவுல பேசல காரணம் என் பிலாக்ல கருத்து பெட்டி எம்டியாத்தா இருக்கு. 



03. BIOS ROM


புதிதாக வரும் தாய்ப்பலகைகளில் மிக சிறிய பயோஸ் சிப் ஒன்றை காணலாம். இதன் தொழிற்பாடுகளை நாம் பார்த்தோமேயானால் 

01. முதல்தர இயங்குதளமாக செயற்படுதலுடன் கணினியில் உள்ள எல்லா வன்பொருட்களையும் தொடர்புபடுத்தல், இதன்போது கணினியில் இணைக்கப்பட்டுள்ள எல்லா வன்பொருட்களுக்கும் hardware id address வழங்குவதோடு தாய்ப்பலகையில் இணைக்கப்பட்டுள்ள எல்லா வன்பொருட்களையும் சோதனை செய்வதும் இதன் தொழிற்பாடுதான். இத மிக இலகுவா நினைவில வச்சிகனும்னா post அதாவது power on self test னு நினைவுல வச்சிக்கங்க. 

02. Configuration Settings அதாவது Bios Settings, பாஸ்வர்ட் ( Bios ல), Boot Device priority எல்லாத்தையும் Save செய்துகொள்வதும் இவரின் தொழிற்பாடுதான். 

இதப்பத்தி பேசுனா பேசிகிட்டே போகலாம், சந்தேகம் இருந்தா கேளுங்க. இல்லைன்னா கூகில் கடவுளின் கருணை உங்களுக்கு தேவைப்படலாம். 


சரி இப்ப பார்ப்போம் இவருக்கு பைத்தியம் பிடிச்சா என்னா நடக்கும்னு. 

01. தாய்ப்பலகைல எல்லாம் சரியா இருந்து எந்த பிரயோசனமும் இல்ல இவர் ஒழுங்கா இல்லாட்டி, இவர்ட செயற்பாடுகள வாசித்தாலே இது புரிஞ்சிருக்கும். ஆக குறைஞ்சது பீப் சத்தம் கூட வராது. 

02. Bios Save ஆகாமற்போதல். உதாரணமாக Time and Date etc. 

03. சரி அப்பிடியும் கணினிய நாம ஆன் பன்னிட்டா முதல் Display Screen லயே Struck ஆகி நிட்கும். 




இதுக்கு கொடுக்கப்படும் மருந்து எல்லோருக்கும் பொதுவா தெரியும்....

01. தாய்ப்பலகையில் உள்ள Battery ஐ கழற்றி சிறிது நேரம் போனதும் திருப்பி பிக்ஸ் பன்றது. 

02. இரண்டாவது முறைன்னா கொஞ்சம் கஷ்டமானது. 
  இதுக்கு சொல்றது பயோஸ் ரீலோட் (Bios Reload), இப்போதைக்கு இது போதும் பயோஸ் ரீலோட் (Bios Reload) பற்றி ஒரு தனி பதிவே எழுதலான்னு நினைக்கிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாம் இன்னும் இருப்பது தாய்பலகையின் பகுதிகளை இணம்காணும் பகுதியில் தான், இன்னும் அதனை திருத்தும் பகுதிக்கு செல்லவே இல்லை, சரி அடுத்தது என்னான்னு பார்ப்போம்.



04. Super I/O அல்லது SIO



Rectangle வடிவத்தில் 2.5 சென்றிமீற்றர் X 1.5 சென்றிமீற்றர் அளவுள்ள சாதாரண சிப் ஒன்று. இதே வடிவத்தில் தாய்ப்பலகையில் On Board Sound மற்றும் LAN ஆகியவை காணப்படுவதால், தவறாக இணங்காண வாய்ப்புகள் உண்டு. இலகுவாக இணங்காண வழி சொன்னா ITE,Winbond,Sms  போன்ற சொற்கள் அதன் மேல் எழுதப்பட்டிருக்கும். இதன் தொழிற்பாடுகள் என்னவென்று பார்த்தால்

01.  South Bridge Chip உடன் இணைந்து கணினியின்  Power on /off களை பேணிவருகின்றது. 

02. keyboard mouse floppy Disk போன்றவற்றை (இதெல்லாம் என்னன்னு மட்டும் கேட்டுறாதிங்க) LPT போர்ட்களை முகாமை செய்கின்றது. 





இதனால் வரும் பிரச்சினைகள் வெறும் இரண்டுதான். 

01. power On அகாமல் போதல் அல்லது அடிக்கடி Restart ஆதல். 

02. keyboard mouse floppy Disk, போன்றவற்றின் LPT போர்ட் வேலை செய்யாது போதல். 



இத சரி செய்யனும்னா re-sold பன்னி பார்க்கனும். ஆனால் தம்பி அதுவும் சரிவரலயோ, அத மாத்தனும்... 



ஆனா அதுக்கு ரொம்ப நல்ல அனுபவம் வேணும்.



 இப்படி இருந்து பத்தாது, Pin எத்தன இருக்குனு பாத்திங்க தானே? 64.. 


புதிய தாய்ப்பலகைகளில் இது சிறிதாகிக்கொண்டே போகின்றது. அப்போனா கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா நிறையப்பேருக்கு இந்த பிரச்சினை சரியா புரியாது. யேன்னா, நான் அடிக்கடி சொல்வேன்... முதல்ல ஷோர்ட் ஆகி இருக்கானு பாருங்க. ஐயொ, இதுக்கு முன்னாடி சொல்லாட்டியும் இனி சொல்லுவேன். 

சரி, ஷோர்ட் ஆகி இருக்கானு எப்பிடி பார்க்குறது??? காய்ச்சல் பார்க்குற தவிற வேற வழி இல்ல, 


ஐயோ, புரியாலயா? Heat ஆகியிருக்கானு பாருங்க. சாதாரணமா எதுவும் Heat அகுற அளவு இருக்குது இல்லையா? அதவிட Heat ஆகுனா அங்க ஷோர்ட் இருக்குனு அர்த்தம். 



06. CLOCK SIGNAL GENERATOR IC 


கண்ணா! பேர கேட்டாலே தெரியுதுல்ல? 




இதன் செயற்பாடு என்னான்னு நாம பேசுனா, தாய்ப்பலகைக்கு தேவையான digital pulse அல்லது  clock signal ஐ உருவாக்கி தாறதுதான் இதன்ட பொதுவான வேலை, 


சரி இது வேலை செய்யாட்டி என்ன நடக்கும். 



அதான்பா, தூங்கிரும். சரி இத எப்பிடி எழுப்புறது????





மேல படத்த பாருங்க. இடது பக்கத்துல உள்ள பகுதிக்கு சொல்றது Cristal னு, ஆ... இதுதான் ஐ.சீ 'ய  Oscillate பன்றது. electronic செய்றவங்களுக்கு இதப்பத்தி தெளிவா புரியும்.  Cristal சரியா வேலை செய்யாட்டி இது செயழிலந்து போகும். அதனால முதல்ல அத மாத்தி பாருங்க. அப்பிடி உங்க அதிஷ்டத்திற்கு சரி வந்துட்டா உங்க கம்பியூட்டர் கீழ இருக்குற குரங்கு மாதிரி சந்தோஷமா பாட்டு பாடிகிட்டுதான் இருக்கும். 






நான் ஏன் உங்க கணினிய குரங்குனு சொல்றேன் என்று முடிஞ்சா கெஸ் பன்னி அதயாவது கருத்து பெட்டியில் போடுங்க. 

நா திரும்பவும் சொல்றேன்.



அப்பறம் முக்கியமான விஷயம் இந்த பதிவு இன்னும் முடியல, பகுதி 02 முடிந்தளவு சீக்கிரமா தாறேன். 

7 comments:

  1. nice post :)

    Read this also:- ;) http://thetechsbot.blogspot.com/2014/01/how-to-convert-your-emails-to-pdf.html

    ReplyDelete
  2. கணினி குரங்கு மாதிரி நல்லா தான் போய்கிட்டு இருக்கும் திடீர்னு கடிச்சு வைச்சிரும் :p

    ReplyDelete
    Replies
    1. அந்த குரங்கை பத்திரமா பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு

      Delete