MOTHER BOARD REPAIRING - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில் - பகுதி 02 - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

January 09, 2014

MOTHER BOARD REPAIRING - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில் - பகுதி 02

வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நான் சென்ற பதிவில் தாய்ப்பலகை திருத்துதல் எனும் தலைப்பில் சில விடயங்களை உமக்கு கூறினேன். இன்று நான் வழங்க இருப்பது தாய்ப்பலகையை திருத்துவது எப்படி என்றுதான் எனினும் அதற்கு முன்னதாக தாய்ப்பலகையில் உள்ள பிரச்சினையை இணங்காணுவது எப்படி? என்பது பற்றியும் நாம் கலந்துரையாட வேண்டும். சரி இன்று பாடத்திற்கு போவோமே!

நான் தலைப்பில் முழு பதிவு (A-Z) என்று கூறியுள்ளேன். எனவே  எனது சென்ற பதிவையும் வாசித்து வாருங்கள். ஏன் என்றால் அதுதான் பகுதி 01. இன்று நாம் இணைவது பகுதி 02 உடன்.

சரி, நேரா விஷயத்திற்கு வருவோம். முதல் பதிவில நாம பார்த்தோம் தாய்ப்பலகையில உள்ள பிரச்சினைகள இணங்கானும் முறைகள் என்ன? அதற்கு சரளமான தீர்வுகள் என்ன? னு. நாம தாய்ப்பலகைல உள்ள பிரச்சினைய சரிய இணங்காணலனா நம்ம நிலம அதோ கெதிதான். 


முதல் கட்டமாக நாம பிரச்சினைகள இணங்காணும் போது அதற்கு சில வினாடிகள் போயிருக்கலாம் ஆனால் இரண்டாவது கட்டம் கொஞ்சம் கஷ்டம்தான். காரணம் அதற்கு நம்மிடம் மிக நம்பிக்கையான  பவர் சப்லை (Used Power Supply) வேண்டும். நாம வழமையா பாவிக்கிற Used Power Supply இதற்கு சரிவராது. செத்துபோன பவர்சப்லைய உயிர்பிச்சி பாவிக்கிற நம்ம சமுதாயத்துல இத தேடிக்கிறது கஷ்டம்தான். ஆனா என்ன பன்ன பன்னிதானே ஆகனும். 


பவர் சப்லைல Switch இருந்தா இன்னும் இலகுவா இருக்கும். Buzzer ஒன்றும் தோவைப்படுகின்றது.


நாம இன்னக்கி பார்க்குற முதல் கட்டமா தாய்ப்பலகைய பரிசீலனை செய்யும் போது இது இரண்டும் போதுமானது எனினும் இத்துடன் ஒரு ட்விசர் ஒன்று இருந்தால் இன்னும் இலகுவாக காணப்படும். 


இன்று நாம் Board ஐ Test செய்வது பிரதான பகுதிகளை மட்டும் இணைத்தே ஆகும். BENCH TEST என்று இதனை ஆங்கிலத்தில் கூறலாம். இப்படி செய்வதன் காரணம் நமக்கு தேவையான விதத்தில் தாய்ப்பலகையை பரிசீலனை செய்ய இலகு என்பதால் ஆகும். 

முதற்கட்ட பரிசீலனை


01. Cooler ஐ இணைக்க


02. CPU Fan ஐ இணைக்க

03. Buzzer ஐ சரியான விதத்தில் இணைக்க

04.  Power Supply  ஐ சரியாக இணைக்க

05. Power Supply  ற்கு இனை வழங்க.


இச்சந்தர்ப்பத்தில் தாய்ப்பலகையின் நிலை 

01. தற்போது தாய்ப்பலகை நிலையில் காணப்படும். 

02. Power Supply Fan சுற்றாமல் காணப்படும். 

03. PRO தற்போது செயற்பாடாது. (சூடாகாத நிலை)

04. N B சூடாகாத நிலை

05. S B சிறிதளவு சூடாகும். 

06 .SIO Chip மற்றும் ஏனைய Chip கள் சூடாகாத நிலையில் காணப்படும்.     சிலவேலைகளில் சூடாகினால் அது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். 

ON செய்யும் போது....

01. Fan செயற்பட ஆரம்பிக்கும்.

02. SIO Chip சாதாரண அளவில் சூடாகும். 

03.  S B ஐ விட N B சூடாகும். (இதன் அருகில் இருப்பதனால் அதனை உணர்வது கொஞ்சம் கடினம்)

04.  ஏனைய கள் அளவிட முடியாத விதத்தில் (ஒவ்வொரு அளவில்) சூடாகும்.


சரி தற்போது, இப்படி ஆகும் தாய்ப்பலகையில் பிரச்சினைகள் ஏதும் இல்லாவிடின் அங்கு காணக்கிடைக்கும் அம்சங்கள் என்னவென்று பார்ப்போம். 

01. வழமையான தாய்ப்பலகைகளில் Pro Fan முதலில் அதி வேகத்தில் சுற்றி பின் அது சாதாரண அளவில் சுற்றும். 

02. RAM Card இணைக்கப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் அது பீப் சத்தம் மூலம் அதனை காண்பிக்கும். 





இப்ப நான் நினைக்கிறேன். தாயப்பலகையின் சாதாரண செயற்பாடுகளில் 50% அறிவை பெற்றிருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். 





இதுக்கப்பறம் ஒன்றும் பெரிதாய் செய்ய தேவையில்லை. தாய்பலகையினுள் RAM Card இனை அல்லது On Board VGA/ VGA பொருத்தி Display வருகிறதா என பார்ப்பதுதான். அப்படி Display வந்துவிட்டால் 80% தாய்ப்பலகை வேலை செய்கிறது எனலாம்.. அப்போ மிகுதி 20%??

100% வர்க் ஆகுதான்னு பாக்க இனி என்ன செய்யனும்னு தெரியும்தானே? Board தெவையான கீபோட்ர்ட், மவுஸ், மானிட்டர், இதெல்லாம் பொருத்தி ஆன் பன்னி அதுக்கு தேவையான ஓஸ் இனை இன்ஸ்டால் பன்னி Drivers ஐ  Install பன்னி பாருங்க.  தேவையான எல்லா Drivers ஐயும் கணினி எடுத்துட்டாலும் 100% வேலைன்னு அர்த்தம் இல்ல.

கணினிய குறைஞ்சது 04 மணித்தியாலமாவது ஆன்லயே வச்சி ஏதாவது வேலை செய்யனும், அல்லது ஒரு படமாவது பாக்கனும். 04 மணித்தியாலயத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லாம வேலை செஞ்சாத்தான் அது 100% சரி. 

என்ன நன்பர்களே! ரொம்ப கஷ்டமான வேலையா தெரியுதா? கஷ்டம்தா.. என்ன செய்ய.. நான் ஆரம்பத்துலயே சொன்னேன் தாய்பலகைய திருத்தனும்னா அதுக்கு பல மணிநேர செலவு ஆகும்னு. அதுக்கொரு உதாரணம்தான் இது.

இத விட நேரம் போற வேலதான் இதுக்கு தேவையான பார்ட்ஸ் தேடுறது. உங்களுக்கு அநேகமா தெரியும் என்று நினைக்கிறேன். பொதுவா தாய்ப்பலகைய திருத்துறப்போ அதுக்கான பாட்ஸ் சந்தைல இல்ல, பழைய தாப்பலகைகள்ளதான் கழட்டனும். இதுக்கு ரொம்ப காலம் எடுக்கும்.

சரி இவ்வளவு நேரம் பார்த்தது இப்படியெல்லாம் நிகழ்ந்தால் என்ன நடக்கும என்றுதானே? நாம் இப்போது பார்ப்போம் இப்படியெல்லாம் நடக்காவிடடால் என்ன நடக்கும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று..

சரி, நாம் தேவையான அனைத்தையும்  Board உடன் இணைத்து Power  கொடுத்துவிட்டோம், பின் ON செய்யவில்லை ஆனால் On ஆகிறதே????

Board ல் உள்ள  Power On Pin இரண்டையும் Short செய்து Off செய்யுங்கள்.  





இதற்குள்தான் ட்விசர் ON ஆகின்றது.

நாம் இப்படி பின் இரண்டையும் Short  செய்தபோது Off  ஆனது என்றால் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால்   Off ஆகாவிட்டால்???

01. அப்போ நினைச்சிக்கலாம் Processor வேலை செய்யவில்லை என்று, ஆனா நிரந்தரமா இல்ல. தற்காலிகலிகமா அதுக்கு Power வரல்ல. இதுக்கு செய்ய இருக்குறதும் சின்ன வேலைதான் Processor ஐ கைகளால் தொட்டு அது சூடாகின்றதா என பார்த்தல்தான். ஆனால் அதற்கு Cooling Fan ஐ கழற்றவும் வரும். அவ்வாறு கழற்றி நீங்கள் அதை தொட்டு பார்க்கும் போது மிக விரைவில் அதனை செய்து முடிக்க வேண்டும். காரணம் அது Over Heat ஆக வாய்ப்புண்டு. 


பொரும்பாலும் Processor   வேலை செய்யாவிட்டால்,  தாய்ப்பலகையில் உள்ள CPU FAN மிக தாய்ப்பலகை ஆன் ஆன நேரம் தொட்டு வேகமாக சுற்றும். 


02. SIO ல் ஏற்பட்டுள்ள Short, இதையும் உங்கள் கைய வச்சி டெஸ்ட் பன்னி பார்திடலாம். ஆனால் பார்த்து மெதுவா பன்னி பாருங்க. 

சரி இப்ப ஆரம்பத்துக்கே போவம். இப்படி Off நிலையில உள்ள தாய்ப்பலகையில காச்சல் பார்த்திங்கனா அது OVER HEAT ஆகாட்டி சரி, OVER HEAT ஆனா?? அப்பறம் என்ன? பார்ட்ஸ் மாத்தறத தவிர எந்த வழியும் இல்ல. சரி அதுல இன்னொரு பிரச்சினையும் இருக்கு, உங்க கையால எவ்வளவு சூடாகுதுனு உணர முடியாது என்ன? அனுபவம் இருக்குறவங்களுக்கு அது உணரக்கூடியதா இருக்கும். ஆனா புதுசா இந்த வேலையில இறங்குறவங்களுக்கு உணர்ரது கொஞ்சம் கஷ்டம்தான். அதுக்குதான்  Ir thermometer பயன்படுத்துறது. 





இத கட்டாயம் வாங்கி வச்சிருக்கனும்னு இல்ல. என் அனுபவத்த வச்சி நான் ஒரு வழி சொல்றேன், நீங்க கைய வச்சி காய்ச்சல் பார்க்குறப்ப 01 செக்கனுக்கு பிறகு உங்களால அத தொட முடியாத அளவுக்கு சூடு வந்தா அதுதான் Over Heat,
ஆனா வக்கிறப்போ கொஞ்சம் கவனமா வைங்க. காரணம் 02 இருக்கு, ஒன்று உங்கள் கை விரல் சுட்டுவிடலாம். அப்பறம் சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாத கதையா மாறிரும். நீங்க விரல வைக்கும் போது விரல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். காரணம் ஏன் என்று சொல்ல தேவையில்லதானே?? அதோட விரல் வைக்கும் போது அதன் பின்கள் போர்ட்ல பட்ற மாதிரி வைக்க கூடாது. 

சரி இதுவரைக்கும் ஒரு பக்கம்தான் பார்த்தோம். Automatic ஆ ON ஆகுற பிரச்சினையதான் பார்த்தோம். இப்ப நாம பின் 02 ஐயும் ஷோர்ட் பன்னி Board ஐ  ON பன்னினா ON அகாட்டி என் செய்யுறதுன்னு பார்ப்போம். 

01. .12v power connecter ஐ கழற்றி அப்பறம்  ON  பன்னி பாருங்க.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிசீலனையின் போது பவர் சப்லையினை ஆப் செய்ய மறக்க வேண்டாம். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


02. மீண்டும் சிப்களுக்கு காய்ச்சல் பாருங்கள்.

03. SB ன் அருகில் கீழ் உள்ள வாறான சிப் ஒன்று காணப்படும். அதை மாற்றி பாருங்கள்.



04. Power Pin இரண்டிலும் Voltage பாருங்கள். அது  Multi Meter ல் 5V காட்ட வேண்டும். 



சரி இப்பொழுது நாம் என்ன நோய் என்று பார்ப்போம். 

12v power connecter ஐ கழற்றிய பின் ஆன் ஆகின்றது. 

இது மிக சிறிய பிரச்சினை. இது நடப்பது இப்படியல்ல பொதுவாக CPU Fan இரண்டு அல்லது மூன்று தடவைகள் சுற்றி பின் நின்றுவிடும். 

இது நடப்பது இப்படிதான்...
CPU ற்கு Power வழங்கும் Circuit எமது Board ல் உள்ளது. இது இருப்பது MOSFET set ல். MOSFET island  என்று நாம் கூறுவது இதைத்தான். இது பொதுவாக 6 தொடக்கம் 9 வரை காணப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஷோர்ட் ஆகி இருந்தால் இப்படி நடக்கும். தெனை பரிசீலனை செய்ய இதனை கழற்றி மீட்டரில் பார்ப்பதுதான்.  



chip over heat ஆனால் அதனை மாற்றி பாருங்கள். 

 Power On Pin ற்கு 5V வரவில்லையாயின் அது பெரிய பாடம். அதனால் இனிவரும் காலங்களில் அதைப்பற்றி தனி பதிவொன்றை எழுத உத்தேசித்துள்ளேன். 

சரி இப்படி நோய்கள் பிடிபடவில்லையாயின், முன்னேறிச்செல்லுங்கள். எல்லாம் நன்றாகவே  நடக்கின்றது. ஆனால் பீப் இல்லை என்றால்???

RAM Ports களில்  Power வருகின்றதா? என பார்க்க வேண்டும். சரி இதை எப்படி பார்ப்பது என்று சொல்லி தருகின்றேன். 

முதலில் 

DDR 1



மேலே உள்ள படத்தில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பின்களுக்கு வால்டேஜ் பார்க்க வேண்டும். அது 2.5v என காட்ட வேண்டும். இதில் மொத்தம் 184 பின்கள். 


DDR 2



இதில் மொத்தம் 184 பின்கள். ஆனால் வால்டேஜ் 1.8v ஆக வரவேண்டும். 

DDR 2





இதுக்குனா அப்பிடி ஒன்றும் நிளைவில் வைத்திருக்க ஒன்றும் இல்லை. உங்களுக்கு முடிந்த முறையில் நினைவில் வைத்திருங்கள். வால்டேஜ் 1.5V வருதல் வேண்டும். 

அப்பாடா இன்னைக்கி இது போதும். இதுக்கு மேலயும் ஏதாவது தெரியனும்னா கூகில் கடவுள்கிட்ட வரம் கேளுங்க. இதுரை நான் வழங்கிய பதிவில் மொழி குறைப்பாடு காணப்படலாம். காரணம் நான் பதிவை ஒரே நேரத்தில் தட்டச்சி செய்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான். அடுத்து நான் Q&A ஒன்றை பதிவாக இட எண்ணியுள்ளேன். ஆகவே உங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய சந்தேகங்களை எம்மிடம் கேளுங்கள். நான் அதற்கான பதிலை, மிக விரைவில் எழுத எண்ணியுள்ளேன். 

நான் நினைக்கின்றேன் பதிவு மிக மோசமாக போயுள்ளது. எனினும் கூட எனது நிறை குறைகளை கமண்ட் பாக்ஸ் உதவியுடன் வழங்கி செல்லுங்கள். அத்துடன் என் பேஸ்புக் பக்கத்தின் வாசகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தயவு செய்து அதிலும் ஒரு லைக் போட்டு செல்லுங்கள். லைக் போட்டால் மாத்திரம் பத்தாது, உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், பதிவுகள் அனைத்தையும் அங்கு பிரசுரித்து வாருங்கள். தமிழர்களுக்காக உருவாக்கியிருக்கும் இந்த தளத்தற்கு நீங்களும் தமிழன் என்றால் மட்டும் உதவுங்கள். நன்றி...





இப்பதிவினை PDF வடிவில் தறவிறக்கம் செய்ய கீழ்காணும் பொத்தானை அழுத்தவும்.





1 comment: