July 2012 - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

July 30, 2012

Password Cracking என்றால் என்ன?

Monday, July 30, 2012 0
Password Cracking என்றால் என்ன?

சரி நன்பர்களே! இன்று நாம் பார்க்க போகும் பாடம் Password Cracking ஆகும். அதாவது இன்று உலகலாவிய ரீதியில் அனைவராலும் செய்யப்படும் ஹக்கிங் முறை இதுவாகும், இது அனைத்திலும் இலகுவானது. அதனால்தான் இது அதிகமான ஹக்கர்களால் பயன்படுத்தப்படுகின்றது. 








அது மூன்று வகைப்படும். 





  • Social Engineering
  • Shoulder Surfing
  • Guessing 

இவ்வாறு பழைய முறைகள் மூன்று உள்ளது. அதைப்பற்றி நான் விளக்கப்போவதில்லை ஏனெனில் அவை தேவையற்றதாக காணப்படுகின்றது. நாம் பழைய விடயங்களை விட்டு இப்போது புதிய விடயங்களை கற்போம். 

அதன்படி நான் அடுத்ததாக விளக்கபோவது இந்த வேலையை செய்யும் போது நம்மை நாம் பாதுகாத்து கொள்வது எப்படி என்று அதற்காக நான் கொஞ்சம் வெளி விடயங்களையும் சொல்லிதர வேண்டி வரும், 

அதற்காக நீங்கள் முதலில் Zone Alarm Firewall ஐ தறவிறக்கி கொள்ளுங்கள். 




அதன் பின்னர் Sand Boxie ஐயும் தறவிறக்கி கொள்ளுங்கள். 




அதன் பின் உங்களுக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ? அந்த Anti Virus Guard ஐயும் தறவிறக்கி கொள்ளுங்கள். 


சரி இப்பொழுது  Zone Alarm Firewall  என்றால் என்னவென்று பார்ப்போம். 

01.Zone Alarm Firewall


இது சாதாரணமாக நம் கணினியின் Firewall போன்றேதான் செயற்படும். அதாவது இணையம் மூலமாக நம் கணினி ஏதாவது மென்பொருளுடன் அல்லது அப்லிகேஷனுடன் நமது அனுமதியின்றி சம்பந்தபடுமாயின் அதை நமக்கு உடனே அறிவிக்கும். இதனால் நமக்கு நிறைய பயன்கள் கிடைத்தாலும் பிரதானமாக கிடைக்கும் பயனாவது, நம் கணினியின் தரவுகள் எந்த விதத்திலும் வெளியேறாது அத்துடன் Pishing Web Page களில் இருந்து பாதுகாப்பு கிட்டும். 

சரி இப்பொழுது Sand Boxie பற்றி பார்ப்போம். 

02. Sand Boxie 

இதனால் நடப்பது என்னவெனில் நம் கணினியில் நாம் ரன் (Run) செய்யும் புரோகிராம்கள் (Programmes) அனைத்தும் சாதாரணமாக ரன் ஆவது ஹாட் டிஸ்கின் (HARD DISK) அனைத்து இடத்திலும் அல்லவா? ஆனால் Sand Boxie  கணினியில் காணப்படுமாயின் அது அதனை இடைவெளிகளில் (SPACES) மட்டுமே ரன் செய்ய வைக்கும்.  கீழே GIF ஐ அவததானித்தால் இது உங்களுக்கு பரியும். 



அதற்கும் மேலாக இதன் பயன்கள் 

01. நாம் உலாவிகளில் (Web Browsers) இணையத்துடன் இணைந்திருக்கும் போது கணினிக்குள் புகும் வைரஸ்கள் மல்வார்களை (Virus / Mallware) தடுத்து நிறுத்தும். 

02. அவ்வாறே நாம் Brows செய்துகொண்டிருக்கும் போது அந்த பக்கத்தின் (Page) ன் Browsing History, Coockies, கள் Windows ல் Leakஆவதை தடுக்கும். 

03. அவ்வாறே ஈ- மெயில் மூலம் வரும்  Spam Virus களை தடுக்கும். 

04. அவ்வாறே System File களை பாதுகாக்கும். 


Sand Boxie  ஐ பவிப்பது எப்படி? 

01. நீங்கள் ரன் செய்யவேண்டிய புரோகிராமை (Programme) அல்லது அதன் Shortcut ஐ Right Click செய்து Run Sand Boxied அழுத்துங்கள்.

02.  அதன் பின்னர் வரும் Box ல் Defult Box ஐ Click செய்து Ok செய்யவும். இப்பொழுது உங்கள் Programme பாதுகாப்பாக உள்ளது. 

03.அதன் பின்னர் டாஸ்க் பார்ல் உள்ள Sand Boxie Icon ஐ சொடுக்கவும். 

04. அதன் பின்னர் அங்கு தோன்றும் Window ல் File Expand செய்து பார்க்க முடியும். அதன் பின்னர் உங்களுக்கு Trust இல்லாத Programme களை Drag & Drop செய்து அதனுள் இட்டு அது பாதுகாப்பாக உள்ளதா என பார்த்துகொள்ள முடியும். 


இத்துடன் இந்த பாடம் இடைநிறுத்தப்படுகின்றது......அத்துடன் நான் கூறியவற்றை செய்து பார்க்கவும். தொடர்ந்தும் இணைந்ததிருங்கள். 


July 28, 2012

இவர்கள் யார் (தெரிந்துகொள்ள சில விடயங்கள்)

Saturday, July 28, 2012 0
இவர்கள் யார் (தெரிந்துகொள்ள சில விடயங்கள்)
முதல் பதிவில் உங்களுக்கான ஹக்கிங் Lab உருவாக்குவது எப்படி? என்று கூறிச்சென்றேன். அதன்படி ஹக்கிங் Lab உருவாக்கிவிட்டால் போதுமா? ஹக்கிங் செய்ய ஹக்கிங் பற்றி சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதைப்பற்றி இன்று கூறலாம் என நினைக்கின்றேன். 






Black Hat
பெயரை கேட்டவுடனே சில நேரங்களில் உங்களுக்கே புரிந்திருக்கும் ஹக்கிங் உலகத்தில் இவர்கள் கெட்ட செயல்களை புரிபவர்கள் எனலாம். அவர்களிடத்து எப்பொழுதும் நல்ல எண்ணங்கள் கிடையாது. இவர்கள் எப்பொழுதும் மற்றயவர்களின் விடங்களை கொள்ளையிட அல்லது அவரின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளவே நினைப்பார்கள்.




இவர்கள்தான் வங்கி, கடனட்டை, தளங்கள் மற்றும் கம்பனிகளின் உள்ளே புகுந்து களவாடி தரவுகளை பெற்றுக்கொள்பவர்கள். ஆனால் இவ்வளவு வேலையும் செய்ய இவர்கள் மிக புத்திசாலிகள்.




White Hat
இவர்களை பற்றி நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன். ஹக்கிங் உலகில் நல்ல விடயங்களுக்காக மட்டும் ஹக்கிங் செயல்களை புரிபவர்கள். காரணம் மேலே Black Hat களுக்கு மாறாக நல்ல எண்ணங்கள் தோன்றும் மனதை கொண்டவர்கள்.




Script Kiddie
இவர்களைப்பற்றியும் சொல்ல தேவையில்லை ஏனெனில் உங்களைபற்றி உங்களுக்கு தெரியாதா? என்ன பாக்குறீங்க? நீங்கதான் Script Kiddie ஸ். ஹக்கிங் பற்றி கற்றுக்கொள்ள முயலும் அனைவரும்  Script Kiddie ஸ் என அழைக்கப்படுவர்.




ஆனால் நீங்கள் இவ்வாறுதான் என கூற முடியாது, காரணம் இவர்கள் தனியே அல்லது சுயமாக எதையும் கற்று புதிதாக எதையும் யோசனை செய்து செய்பவர்கள் அல்ல. மற்றயவர்கள் செய்த அப்லிகேஷன்ஸ் கொண்டு ஹக்கிங் செயல்களை புரிபவர்கள் இவர்கள். இவர்களுக்கு இதனால் எந்த பயனும் கிடைக்காது என இவர்களுக்கே தெரியாது என்பது மட்டும் நன்றாக தெரியும்.








Intermidiate Hackers
இவர்கள் யார் என்று தெரியுமா? Script Kiddie ஐ விட சிறிது முன் உள்ளவர்கள். இவர்களுக்கு 50 வீத Programming Knowladge  உள்ளவர்கள். இவர்களுக்கு தானாகவே ஒரு அப்லிகேஷனை உருவாக்கிகொள்ள முடியும். இவர்களால் பெரிய செயல்கள் ஏதும் புரிய இயலாது.








Elite Hackers
இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? இவர்களுக்கு நான் வழங்கும் பெயர் ஹக்கிங் உலகின் ஜாம்பவான்களே! பொதுவாக அனைத்து விடயங்களிலும் புகுந்து உலகை கலக்கிக்கொண்டிருக்கும் மிக சிறந்த நுட்பங்களை கொண்ட ஹக்கர்கள் இவர்கள். Script Kiddie களுக்கும் இவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஆனால் அது ஒற்றுமை அல்ல. என்னவென்றால் Script Kiddie கள் அப்லிகேஷன்களை உருவாக்கி பாவிக்க மாட்டார்கள். இவர்களும் அவ்வாறேதான் அப்லிகேஷன்களை உருவாக்கி பாவிக்க மாட்டார்கள். ஆனால் அப்லிகேஷன்ஸ் இல்லாமலே சாதிக்க கூடியவர்கள்.




Elite Hackers ன் பண்புகள்




01. இவர்கள் எப்பொழுதும் ஒரு புதிய விடயத்தை கொண்டே பிரச்சினைகளை தீர்ப்பர். அவ்வாறு பிரச்சினைகளை தீர்க்கும் போது இவர்களிடத்து பெரிய சக்தி செலவிடப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு கடைப்பது ஒரு மகிழ்ச்சி மட்டுமே. ஆனால் இவர்கள் அனுமன் போல, அவர்களின் சக்தியை அவர்களே அறிவதில்லை.




02. இவர்களால் பிரச்சினையை மிக சரியாக தீர்ப்பர். இவர்கள் எந்த நேரமும் அனுதினம் வாழ்வில் எந்த வேலையிலும் ஒரு ஹக்கராகவே அனைவருக்கும் தோன்றுவர்.




03. இவர்களுக்கு கஷ்டப்படுவது பிடிக்காது. அது அவர்களுக்கு சரியாக ஒரு எதிரி போலவே ஆகும். அவர்கள் செய்வது மிக இலகுவாக எதையும் செய்துகொள்ளவே ஆகும்.




04. அவர்கள் செய்வது அவர்களுக்கு முடிந்த விடயங்களை மட்டுமே ஆகும். அத்துடன் அவர்களுக்கு யாரிடத்திலும் அல்லது யாருக்கும் அடிபணிந்து வேலை செய்வது  பிடிக்காது. அனைத்தும் தன்னுடையதாகவும் அத்துடன் புதிதாகவும் யாரும் எதிர்பார்காத நேரத்தில் செய்வதே  பிடிக்கும்.


நான் நினைக்கின்றேன் இப்பதிவில் சிறிதேனும் ஹக்கிங் பற்றி அறிவை பெற்றிருப்பீர்கள் என்று. தெடர்ந்தும் இணைந்திருங்கள்.......









July 21, 2012

உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி?

Saturday, July 21, 2012 5
உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி?
நீங்களும் ஒரு ஹக்கராக மாறலாம், அவ்வாறு ஹக்கராக மாறுவதற்கு முதலில் ஹக்கிங்க லாம் (Hacking Lab) ஒன்று அவசியம் அதனை எவ்வாறு உருவாக்குவது என்று பார்ப்போமா?

ஹக்கிங்கான இயங்குதளத்தை (OPERATING SYSTEM) தெரிவு செய்வது எப்படி? 


உங்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன். உலகலாவிய ரீதியில் இன்று அனைவரும் பாவிக்கும் ஒரே இயங்குதளமே Windows ஆகும். இதுதான் உங்களுக்கு தெரிந்த விடயம் ஆனால் உலகில் அதிகமாக Server களில் பாவிப்பது Crappy என்ற ஒருவகை இயங்குதளத்தினை என்பதை நீங்கள் அறிவீர்களா?




இவை இரண்டிற்கும் இடையிலான பிரதான வேறுபாடு என்ன என்று தெரியுமா? லினக்ஸ் ஒரு Open Source ஆகும். ஆனால் Windows அப்படியல்ல. லினக்ஸில் Kernal ஐ கூட மாற்றியமைக்கலாம். ஆனால் Windows ல் அப்படி செய்ய முடியாது. 

ஹக்கிங் என்றாலே Open Source இயங்குதளத்தையே தெரிவு செய்ய வேண்டும். அதனால் என்னுடைய கருத்து என்னவிடில் நீங்கள் லினக்ஸ் தெரிவு செய்யுங்கள் என்றல்ல. லினக்ஸ்ஸையும் பாவித்து பாருங்கள் என்றே ஆகும். 

நாம் ஆரம்பத்தில் இருந்து பாவித்து வந்த  Windows ஐ விட்டு  திடீர் என்று மாறிவிட்டால் நமக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் அதற்காக நீங்கள் Virtual Box என்ற மென்பொருளை கொண்டு பாவித்து பார்க்கலாம்.


இன்னும் பல இயங்குதளங்களை பாவிக்க விரும்பினால் சில இரகசியமான இயங்குதளங்கள் இங்கு உள்ளன பாவித்து பாருங்கள். 


 

உங்களுக்கான Hacking Lab ஐ உருவாக்குவது எப்படி?

இப்ப இயங்குதளத்தை பற்றி பார்த்துவிட்டோம் ஆனால் அவை யாவும் ஹக்கிங் செயற்பாட்டிற்கு தேவையான விதத்தில் நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பல மென்பொருட்கள், டூல்ஸ் களை நிறுவிக் கொள்ளல் வேண்டும். அதனால் உங்களுக்கு சிரமம் அல்லவா? 

அதனால் நமது வசதிக்கேற்ப நம்மால் முடிந்த ஒரு ஹக்கிங் இயங்குதளத்தை பாவிக்க விரும்புகிறீரா?   Hacking Lab ஐ உருவாக்குவதுடன் அதைப்பற்றி கற்போமா? 

உங்கள்  Hacking Lab ஐ உருவாக்க பின்வருவன தேவைப்படுகின்றது. 

01.Oracle Virtual Box

02.Windows 7

03.Backtrack 5

04.Virtual Box Extension Pack 



Installation Steps


Step 01


Oracle Virtual Box ஐ நிறுவிக் கொள்ளவும்.


Step 02
Virtual Box Extension Pack  னையும் நிறுவிக்கொள்ளவும். 


Step 03
அப்பறமா Oracle Virtual Box பாவித்து Backtrack 5 மற்றும் Windows 7  ஐ நிறுவிக் கொள்ளுங்கள். 


அவ்வளவுதான் உங்க கணினில Backtrack 5  இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளதா? நிறுவப்பட்டுள்ளது என்றால் நிச்சயமாக உங்கள் Hacking Lab உருவாக்கப்பட்டுள்ளது.


இதுக்கப்பறமும் சந்தேகம் இருந்தால் இந்த விடீயோவ பாருங்க.





அதபார்த்தும் சந்தேகம் வந்தா? என்ன கேளுங்க..... கருத்துரைப்பெட்டியின் வாயிலாக.




என்னடா சும்மா Backtrack 5  நிறுவ சொன்னேன் என்று கேட்கலாம். காரணம் நிறுவின பின் புரியும். ஹக்கிங் டூல்ஸ் மட்டுமே கொண்ட இந்த இயங்குதளம் ஹக்கிங் வேலைகளுக் கு மிக சிறந்ததாக அமையும். என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 


July 19, 2012

Admini Password ஐ Hack செய்வது எப்படி?

Thursday, July 19, 2012 5
Admini Password ஐ Hack செய்வது எப்படி?
முதல் பதிவு என்பதால் நேரா விஷயத்துக்கே போவம்.......

01. உங்கள் கணினியை Restart செய்யுங்கள். (பாதிப்புற்ற கணினியை)

02. Restart செய்யும்போது F8அழுத்தியவாறு இருப்பீராயின் Safe Mode செல்ல நுழைவிடம் கிடைக்கும்.  

03. அதனூடாக Safe Mode சென்றால் பாதிப்புற்ற கணக்கு (User Account) இல்லாமல் Administrator என்ற ஒரு கணக்கு கிடைக்கும். அதனுள் Logging  ஆகுங்கள். 

04. இப்போது அங்கு Control Panel சென்று User Accounts  சென்று உங்கள் கணினியில் பாதிப்புற்ற கணக்கின் கடவுச்சொல்லை (Password) ஐ Remove செய்யுங்கள். 

இது எனது இத்தளத்திலான முதல் பதிவு தயவு செய்து உங்கள் கருத்துக்களை முன்வைத்து செல்லுங்கள்.