January 2014 - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

January 19, 2014

தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன்

Sunday, January 19, 2014 2
தீராத Drivers பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க ஒரு வழி 100% பயன்


வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நாம் அனைவரும் கணினிகளை தினத் தினம் பாவித்துதான் வருகிறோம். அதில் நாம் எதிர்நோக்கும் மிக பெரிய பிரச்சினைத்தான் Drivers. கணினியை Format செய்தாலோ அல்லது புதிய Device களை இணைத்தாலோ இப்பிரச்சினை அனைவருக்கும் வருகின்றது. என்னதான் மாடல் களை வழங்கி தேடினாலும் சில Drivers  கிடைப்பதில்லை. 


அதற்கான ஒரு தீர்வை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன். அது மிக சிறிய மென்பொருள். 3DPchip எனபது இதன் பெயராகும். இதனை கீழே பயமின்றி தறவிறக்கி கொள்ளலாம். 



"Screen Shot"





மேலே உள்ளதை தறவிறக்கி உங்கள் கணினியிலும் நிறுவி பாருங்கள். இனி எந்த விதத்திலும் உங்களுக்கு Drivers பிரச்சினை வராது என்பதை உறுதியாக கூறுகின்றேன். 


எப்பதிவு பிடித்திருந்தால் தினம் தோறும் எமது புதிய வரவுகளை உங்கள் Timeline ல் காண தயவு செய்து கீழே சென்று ஒரு லைக் போடவும். 



January 11, 2014

ஒரே கிலிக்கில் 1,000 க்கு மேற்பட்ட Like உங்கள் Fb Page ற்கும்...

Saturday, January 11, 2014 1
ஒரே கிலிக்கில் 1,000 க்கு மேற்பட்ட Like உங்கள் Fb Page ற்கும்...

வணக்கம் வணக்கம் வணக்கம், கடந்த பதிவுகளுக்கு ஏதோ ஒரு வகையில் உங்கள் ஆதரவை வழங்கியுள்ளீர்கள் என்றுதான் கூற வேண்டும். சந்தோஷம்,


இன்று நான் வழங்க இருக்கும் பதிவு என்னவென்றால் ஒரே கிலிக்கில் 1,000 Likes உங்கள் Facebook Page ற்கு பெற்றுத்தருவது எப்படி என்று? 


தலைப்பை பார்த்தவுடன் பொய் என்று எண்ண வேண்டாம். நான் பொய் கூறவில்லை, அது உண்மை. ஆனால் அது நடக்க ஒன்று கட்டாயம் வேண்டும் அதாவது உங்கள் Facebook Friends List ல் 1000 ற்கு மேற்பட்டவர்கள் காணப்பட வேண்டும். காரணம் இம்முறையில் நடப்பது ஒன்றும் அதிசயம் அல்ல, மெது மெதுவாக ஒவ்வொருத்தருக்கும் அனுப்பும்  Facebook Page Invite ஐ ஒரே கிலிக்கில் அனுப்ப போகின்றோம். அவ்வளவுதான். 

எப்படி இதை செய்வது என்று இப்பொழுது பார்ப்போம். 

Download பன்னிக்கோங்க...


01.முதல்ல உங்க  Facebook Page கி போங்க. 

02. அங்க போனது உங்க Key Board ல " F12 " அழுத்துங்க. (கீழ ஒரு விண்டோ திறக்கும்) 

03. அதுல Console அப்பிடிங்குற Tab கு போய்ட்டு அதுல தறவிறக்கம் செய்த Code ஐ Paste பன்னுங்க. 

அப்பறம் உங்களுக்கே புரியும்....

என்னதான் உங்களுக்கு இப்பிடி பன்னாலும் எனக்கு ஒரு லைக் போட மறந்துறாதீங்க.









January 10, 2014

4GB வீடியோவை 700MB ஆக அதே Quality ல் Rip செய்ய ஒரு சிறப்பு மென்பொருள்

Friday, January 10, 2014 0
4GB வீடியோவை 700MB ஆக  அதே Quality  ல்  Rip செய்ய ஒரு சிறப்பு மென்பொருள்
வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நான் இந்த பதிவுல பேசப்போற விஷயம் 4GB, Or அதுக்கு மேலயும் இருக்குற எத்தனையோ வீடியோக்கல பார்த்திருப்போம். தைநம்ம கொண்டு செல்றது கடினம் காரணம் நமக்கிட்ட Staorage Capacity இருக்காது. அதனாலத்தான் நான் இந்த பதிவை எழுதினேன். 



அதுக்கு முன்னாடி மேல இருக்குற குரங்க அடயாளம் தெரியுதா? Tamilishhacker னு சொல்லாம என்ன வேணும்னாலும் சொல்லுங்க. அடயாளம் தெரிஞ்சா உங்களுக்கு இந்த பதிவு தேவையில்ல. தெரியாதவங்க கீழ உள்ள பொத்தான அழுத்தி தறவிறக்கம் செய்துகொள்ளுங்க. 



அது பத்தாது கீழ இருக்குற Crack ஐயும் தறவிறக்கி கொள்ளுங்க. 



01.அப்பறமா முதல்ல தறவிறக்குன Setup File ஐ பாவித்து Install பன்னிக்கொள்ளுங்க. 

02. பிறகு தறவிறக்கின .DLL File ஐ 

C:\Program Files\DVDFab 9 

ல போய் Paste பன்னிருங்க. 




DvDFab Features



Support Format


Support Device



இதுக்கு மேலயும் நா பேசி டைம்ம வேஸ்ட் பன்ன விரும்பவில்லை, பாவித்து பார்த்து உங்கள் கருத்துகளை மறக்காம வழங்கி செல்லுங்கள். மற்றும் பாவிக்காவிட்டாலும் உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படும். என் நிறை குறைகளை் அனைத்தையும் சுட்டி காட்டும் உரிமை உமக்கு உண்டு. 


அத்துடன் என் முகப்புத்தக பக்கத்திலும் ஒரு லைக் போட்டு செல்லுங்கள். 






January 09, 2014

MOTHER BOARD REPAIRING - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில் - பகுதி 02

Thursday, January 09, 2014 1
MOTHER BOARD REPAIRING - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில் - பகுதி 02
வணக்கம் அன்பு நெஞ்சங்களே! நான் சென்ற பதிவில் தாய்ப்பலகை திருத்துதல் எனும் தலைப்பில் சில விடயங்களை உமக்கு கூறினேன். இன்று நான் வழங்க இருப்பது தாய்ப்பலகையை திருத்துவது எப்படி என்றுதான் எனினும் அதற்கு முன்னதாக தாய்ப்பலகையில் உள்ள பிரச்சினையை இணங்காணுவது எப்படி? என்பது பற்றியும் நாம் கலந்துரையாட வேண்டும். சரி இன்று பாடத்திற்கு போவோமே!

நான் தலைப்பில் முழு பதிவு (A-Z) என்று கூறியுள்ளேன். எனவே  எனது சென்ற பதிவையும் வாசித்து வாருங்கள். ஏன் என்றால் அதுதான் பகுதி 01. இன்று நாம் இணைவது பகுதி 02 உடன்.

சரி, நேரா விஷயத்திற்கு வருவோம். முதல் பதிவில நாம பார்த்தோம் தாய்ப்பலகையில உள்ள பிரச்சினைகள இணங்கானும் முறைகள் என்ன? அதற்கு சரளமான தீர்வுகள் என்ன? னு. நாம தாய்ப்பலகைல உள்ள பிரச்சினைய சரிய இணங்காணலனா நம்ம நிலம அதோ கெதிதான். 


முதல் கட்டமாக நாம பிரச்சினைகள இணங்காணும் போது அதற்கு சில வினாடிகள் போயிருக்கலாம் ஆனால் இரண்டாவது கட்டம் கொஞ்சம் கஷ்டம்தான். காரணம் அதற்கு நம்மிடம் மிக நம்பிக்கையான  பவர் சப்லை (Used Power Supply) வேண்டும். நாம வழமையா பாவிக்கிற Used Power Supply இதற்கு சரிவராது. செத்துபோன பவர்சப்லைய உயிர்பிச்சி பாவிக்கிற நம்ம சமுதாயத்துல இத தேடிக்கிறது கஷ்டம்தான். ஆனா என்ன பன்ன பன்னிதானே ஆகனும். 


பவர் சப்லைல Switch இருந்தா இன்னும் இலகுவா இருக்கும். Buzzer ஒன்றும் தோவைப்படுகின்றது.


நாம இன்னக்கி பார்க்குற முதல் கட்டமா தாய்ப்பலகைய பரிசீலனை செய்யும் போது இது இரண்டும் போதுமானது எனினும் இத்துடன் ஒரு ட்விசர் ஒன்று இருந்தால் இன்னும் இலகுவாக காணப்படும். 


இன்று நாம் Board ஐ Test செய்வது பிரதான பகுதிகளை மட்டும் இணைத்தே ஆகும். BENCH TEST என்று இதனை ஆங்கிலத்தில் கூறலாம். இப்படி செய்வதன் காரணம் நமக்கு தேவையான விதத்தில் தாய்ப்பலகையை பரிசீலனை செய்ய இலகு என்பதால் ஆகும். 

முதற்கட்ட பரிசீலனை


01. Cooler ஐ இணைக்க


02. CPU Fan ஐ இணைக்க

03. Buzzer ஐ சரியான விதத்தில் இணைக்க

04.  Power Supply  ஐ சரியாக இணைக்க

05. Power Supply  ற்கு இனை வழங்க.


இச்சந்தர்ப்பத்தில் தாய்ப்பலகையின் நிலை 

01. தற்போது தாய்ப்பலகை நிலையில் காணப்படும். 

02. Power Supply Fan சுற்றாமல் காணப்படும். 

03. PRO தற்போது செயற்பாடாது. (சூடாகாத நிலை)

04. N B சூடாகாத நிலை

05. S B சிறிதளவு சூடாகும். 

06 .SIO Chip மற்றும் ஏனைய Chip கள் சூடாகாத நிலையில் காணப்படும்.     சிலவேலைகளில் சூடாகினால் அது பிரச்சினைகளை தோற்றுவிக்கும். 

ON செய்யும் போது....

01. Fan செயற்பட ஆரம்பிக்கும்.

02. SIO Chip சாதாரண அளவில் சூடாகும். 

03.  S B ஐ விட N B சூடாகும். (இதன் அருகில் இருப்பதனால் அதனை உணர்வது கொஞ்சம் கடினம்)

04.  ஏனைய கள் அளவிட முடியாத விதத்தில் (ஒவ்வொரு அளவில்) சூடாகும்.


சரி தற்போது, இப்படி ஆகும் தாய்ப்பலகையில் பிரச்சினைகள் ஏதும் இல்லாவிடின் அங்கு காணக்கிடைக்கும் அம்சங்கள் என்னவென்று பார்ப்போம். 

01. வழமையான தாய்ப்பலகைகளில் Pro Fan முதலில் அதி வேகத்தில் சுற்றி பின் அது சாதாரண அளவில் சுற்றும். 

02. RAM Card இணைக்கப்பட்டிருக்காத சந்தர்ப்பத்தில் அது பீப் சத்தம் மூலம் அதனை காண்பிக்கும். 





இப்ப நான் நினைக்கிறேன். தாயப்பலகையின் சாதாரண செயற்பாடுகளில் 50% அறிவை பெற்றிருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன். 





இதுக்கப்பறம் ஒன்றும் பெரிதாய் செய்ய தேவையில்லை. தாய்பலகையினுள் RAM Card இனை அல்லது On Board VGA/ VGA பொருத்தி Display வருகிறதா என பார்ப்பதுதான். அப்படி Display வந்துவிட்டால் 80% தாய்ப்பலகை வேலை செய்கிறது எனலாம்.. அப்போ மிகுதி 20%??

100% வர்க் ஆகுதான்னு பாக்க இனி என்ன செய்யனும்னு தெரியும்தானே? Board தெவையான கீபோட்ர்ட், மவுஸ், மானிட்டர், இதெல்லாம் பொருத்தி ஆன் பன்னி அதுக்கு தேவையான ஓஸ் இனை இன்ஸ்டால் பன்னி Drivers ஐ  Install பன்னி பாருங்க.  தேவையான எல்லா Drivers ஐயும் கணினி எடுத்துட்டாலும் 100% வேலைன்னு அர்த்தம் இல்ல.

கணினிய குறைஞ்சது 04 மணித்தியாலமாவது ஆன்லயே வச்சி ஏதாவது வேலை செய்யனும், அல்லது ஒரு படமாவது பாக்கனும். 04 மணித்தியாலயத்திற்கும் எந்த பிரச்சினையும் இல்லாம வேலை செஞ்சாத்தான் அது 100% சரி. 

என்ன நன்பர்களே! ரொம்ப கஷ்டமான வேலையா தெரியுதா? கஷ்டம்தா.. என்ன செய்ய.. நான் ஆரம்பத்துலயே சொன்னேன் தாய்பலகைய திருத்தனும்னா அதுக்கு பல மணிநேர செலவு ஆகும்னு. அதுக்கொரு உதாரணம்தான் இது.

இத விட நேரம் போற வேலதான் இதுக்கு தேவையான பார்ட்ஸ் தேடுறது. உங்களுக்கு அநேகமா தெரியும் என்று நினைக்கிறேன். பொதுவா தாய்ப்பலகைய திருத்துறப்போ அதுக்கான பாட்ஸ் சந்தைல இல்ல, பழைய தாப்பலகைகள்ளதான் கழட்டனும். இதுக்கு ரொம்ப காலம் எடுக்கும்.

சரி இவ்வளவு நேரம் பார்த்தது இப்படியெல்லாம் நிகழ்ந்தால் என்ன நடக்கும என்றுதானே? நாம் இப்போது பார்ப்போம் இப்படியெல்லாம் நடக்காவிடடால் என்ன நடக்கும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று..

சரி, நாம் தேவையான அனைத்தையும்  Board உடன் இணைத்து Power  கொடுத்துவிட்டோம், பின் ON செய்யவில்லை ஆனால் On ஆகிறதே????

Board ல் உள்ள  Power On Pin இரண்டையும் Short செய்து Off செய்யுங்கள்.  





இதற்குள்தான் ட்விசர் ON ஆகின்றது.

நாம் இப்படி பின் இரண்டையும் Short  செய்தபோது Off  ஆனது என்றால் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால்   Off ஆகாவிட்டால்???

01. அப்போ நினைச்சிக்கலாம் Processor வேலை செய்யவில்லை என்று, ஆனா நிரந்தரமா இல்ல. தற்காலிகலிகமா அதுக்கு Power வரல்ல. இதுக்கு செய்ய இருக்குறதும் சின்ன வேலைதான் Processor ஐ கைகளால் தொட்டு அது சூடாகின்றதா என பார்த்தல்தான். ஆனால் அதற்கு Cooling Fan ஐ கழற்றவும் வரும். அவ்வாறு கழற்றி நீங்கள் அதை தொட்டு பார்க்கும் போது மிக விரைவில் அதனை செய்து முடிக்க வேண்டும். காரணம் அது Over Heat ஆக வாய்ப்புண்டு. 


பொரும்பாலும் Processor   வேலை செய்யாவிட்டால்,  தாய்ப்பலகையில் உள்ள CPU FAN மிக தாய்ப்பலகை ஆன் ஆன நேரம் தொட்டு வேகமாக சுற்றும். 


02. SIO ல் ஏற்பட்டுள்ள Short, இதையும் உங்கள் கைய வச்சி டெஸ்ட் பன்னி பார்திடலாம். ஆனால் பார்த்து மெதுவா பன்னி பாருங்க. 

சரி இப்ப ஆரம்பத்துக்கே போவம். இப்படி Off நிலையில உள்ள தாய்ப்பலகையில காச்சல் பார்த்திங்கனா அது OVER HEAT ஆகாட்டி சரி, OVER HEAT ஆனா?? அப்பறம் என்ன? பார்ட்ஸ் மாத்தறத தவிர எந்த வழியும் இல்ல. சரி அதுல இன்னொரு பிரச்சினையும் இருக்கு, உங்க கையால எவ்வளவு சூடாகுதுனு உணர முடியாது என்ன? அனுபவம் இருக்குறவங்களுக்கு அது உணரக்கூடியதா இருக்கும். ஆனா புதுசா இந்த வேலையில இறங்குறவங்களுக்கு உணர்ரது கொஞ்சம் கஷ்டம்தான். அதுக்குதான்  Ir thermometer பயன்படுத்துறது. 





இத கட்டாயம் வாங்கி வச்சிருக்கனும்னு இல்ல. என் அனுபவத்த வச்சி நான் ஒரு வழி சொல்றேன், நீங்க கைய வச்சி காய்ச்சல் பார்க்குறப்ப 01 செக்கனுக்கு பிறகு உங்களால அத தொட முடியாத அளவுக்கு சூடு வந்தா அதுதான் Over Heat,
ஆனா வக்கிறப்போ கொஞ்சம் கவனமா வைங்க. காரணம் 02 இருக்கு, ஒன்று உங்கள் கை விரல் சுட்டுவிடலாம். அப்பறம் சூடுகண்ட பூனை அடுப்பங்கரை நாடாத கதையா மாறிரும். நீங்க விரல வைக்கும் போது விரல் காய்ந்த நிலையில் இருக்க வேண்டும். காரணம் ஏன் என்று சொல்ல தேவையில்லதானே?? அதோட விரல் வைக்கும் போது அதன் பின்கள் போர்ட்ல பட்ற மாதிரி வைக்க கூடாது. 

சரி இதுவரைக்கும் ஒரு பக்கம்தான் பார்த்தோம். Automatic ஆ ON ஆகுற பிரச்சினையதான் பார்த்தோம். இப்ப நாம பின் 02 ஐயும் ஷோர்ட் பன்னி Board ஐ  ON பன்னினா ON அகாட்டி என் செய்யுறதுன்னு பார்ப்போம். 

01. .12v power connecter ஐ கழற்றி அப்பறம்  ON  பன்னி பாருங்க.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நீங்கள் செய்யும் ஒவ்வொரு பரிசீலனையின் போது பவர் சப்லையினை ஆப் செய்ய மறக்க வேண்டாம். 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு + குறிப்பு

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


02. மீண்டும் சிப்களுக்கு காய்ச்சல் பாருங்கள்.

03. SB ன் அருகில் கீழ் உள்ள வாறான சிப் ஒன்று காணப்படும். அதை மாற்றி பாருங்கள்.



04. Power Pin இரண்டிலும் Voltage பாருங்கள். அது  Multi Meter ல் 5V காட்ட வேண்டும். 



சரி இப்பொழுது நாம் என்ன நோய் என்று பார்ப்போம். 

12v power connecter ஐ கழற்றிய பின் ஆன் ஆகின்றது. 

இது மிக சிறிய பிரச்சினை. இது நடப்பது இப்படியல்ல பொதுவாக CPU Fan இரண்டு அல்லது மூன்று தடவைகள் சுற்றி பின் நின்றுவிடும். 

இது நடப்பது இப்படிதான்...
CPU ற்கு Power வழங்கும் Circuit எமது Board ல் உள்ளது. இது இருப்பது MOSFET set ல். MOSFET island  என்று நாம் கூறுவது இதைத்தான். இது பொதுவாக 6 தொடக்கம் 9 வரை காணப்படும். அவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஷோர்ட் ஆகி இருந்தால் இப்படி நடக்கும். தெனை பரிசீலனை செய்ய இதனை கழற்றி மீட்டரில் பார்ப்பதுதான்.  



chip over heat ஆனால் அதனை மாற்றி பாருங்கள். 

 Power On Pin ற்கு 5V வரவில்லையாயின் அது பெரிய பாடம். அதனால் இனிவரும் காலங்களில் அதைப்பற்றி தனி பதிவொன்றை எழுத உத்தேசித்துள்ளேன். 

சரி இப்படி நோய்கள் பிடிபடவில்லையாயின், முன்னேறிச்செல்லுங்கள். எல்லாம் நன்றாகவே  நடக்கின்றது. ஆனால் பீப் இல்லை என்றால்???

RAM Ports களில்  Power வருகின்றதா? என பார்க்க வேண்டும். சரி இதை எப்படி பார்ப்பது என்று சொல்லி தருகின்றேன். 

முதலில் 

DDR 1



மேலே உள்ள படத்தில் வட்டம் போட்டு காட்டப்பட்டிருக்கும் பின்களுக்கு வால்டேஜ் பார்க்க வேண்டும். அது 2.5v என காட்ட வேண்டும். இதில் மொத்தம் 184 பின்கள். 


DDR 2



இதில் மொத்தம் 184 பின்கள். ஆனால் வால்டேஜ் 1.8v ஆக வரவேண்டும். 

DDR 2





இதுக்குனா அப்பிடி ஒன்றும் நிளைவில் வைத்திருக்க ஒன்றும் இல்லை. உங்களுக்கு முடிந்த முறையில் நினைவில் வைத்திருங்கள். வால்டேஜ் 1.5V வருதல் வேண்டும். 

அப்பாடா இன்னைக்கி இது போதும். இதுக்கு மேலயும் ஏதாவது தெரியனும்னா கூகில் கடவுள்கிட்ட வரம் கேளுங்க. இதுரை நான் வழங்கிய பதிவில் மொழி குறைப்பாடு காணப்படலாம். காரணம் நான் பதிவை ஒரே நேரத்தில் தட்டச்சி செய்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான். அடுத்து நான் Q&A ஒன்றை பதிவாக இட எண்ணியுள்ளேன். ஆகவே உங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டிய சந்தேகங்களை எம்மிடம் கேளுங்கள். நான் அதற்கான பதிலை, மிக விரைவில் எழுத எண்ணியுள்ளேன். 

நான் நினைக்கின்றேன் பதிவு மிக மோசமாக போயுள்ளது. எனினும் கூட எனது நிறை குறைகளை கமண்ட் பாக்ஸ் உதவியுடன் வழங்கி செல்லுங்கள். அத்துடன் என் பேஸ்புக் பக்கத்தின் வாசகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தயவு செய்து அதிலும் ஒரு லைக் போட்டு செல்லுங்கள். லைக் போட்டால் மாத்திரம் பத்தாது, உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், பதிவுகள் அனைத்தையும் அங்கு பிரசுரித்து வாருங்கள். தமிழர்களுக்காக உருவாக்கியிருக்கும் இந்த தளத்தற்கு நீங்களும் தமிழன் என்றால் மட்டும் உதவுங்கள். நன்றி...





இப்பதிவினை PDF வடிவில் தறவிறக்கம் செய்ய கீழ்காணும் பொத்தானை அழுத்தவும்.





January 02, 2014

Mother Board Repairing - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில்

Thursday, January 02, 2014 7
Mother Board Repairing - தாய்ப்பலகை திருத்துதல் - சரளமான தமிழில்
வணக்கம் சகோதர சகோதரிகளே! இன்று புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதிலும் இப்பதிவின் ஊடாக உங்களை சந்திப்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எமது பக்கத்தில் எத்தனை பதிவுகள் வந்திருந்தாலும் இந்த பதிவு அப்பதிவுகளில் முற்றிலும் வேறுபட்டது என நினைக்கின்றேன். அதாவது நாம் அன்றாடம் பாவிக்கும் கணினியின் பிரதான பகுதிதான் தாய்ப்பலகை (Motherboard ).  அகவே அதைப்பற்றி சற்று பேசலாம் என நினைக்கின்றேன். தாய்ப்பலகையின் அறிமுகம் எல்லாம் தந்து பதிவை கசப்பாக்க விரும்பவில்லை. நேரடியாக விஷயத்திற்கு வருகின்றேன். நான் எடுத்துள்ள தலைப்பு தாய்ப்பலகை திருத்துதல் அதாவது Motherboard Repairing. அதற்கு தேவையான முக்கியமான டூல்தான் நல்ல பொவ்த் ஒன்று. அதாவது நாம் ஈயத்தால் இணைக்க உதவும் கருவி. 




மிக நல்லது Goot எனப்படும் Brand, அதில் 30 W இருந்தால் போதும். வேலைக்கும் பொருத்தமானது. தேவையான அடுத்த விடயம் நல்ல மல்டி மீடர் (Multi Meter). 





அடுத்தது ஹாட் வெயார் கன் (Hardware Gun). 



அவ்வளவுதான். ஆனால் அது மட்டும் போதாது. அதற்கு நல்ல மதிநுட்பம் வேண்டும். பயப்படாதிங்க அத நாமலே வர வச்சிக்கலாம். 

01. முதலில் நாம் பார்க்க இருப்பது மோபோ வகையான தாய்ப்பலகை ஆகும். பொதுவாக அனைவருக்கும் இந்த தாய்ப்பலகையைப்பற்றி தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். 



 01. NORTH BRIDGE OR MEMORY CONTROLLER HUB 

இதுதான் தாய்ப்பலகை ஒன்றின் மிக பிரதான பகுதி. இதனை இணங்காணும் முறைகள் 03 உள்ளது. 

01. தாய்ப்பலகையில் உள்ள மிகப்பெரிய சிப் (Chip) இதுவாகும். 
02. பொதுவாக Heat Sink உடன் இணைக்கப்பட்டிருக்கும். 
03. CPU Socket ற்கும் RAM Slot ற்குமிடையில் காணப்படும்.  


இதனால் ஆற்றப்படும் கருமங்கள் என்னவென்று பார்ப்போமேயானால் 





 01. CPU, RAM, AGP அல்லது PCI Ex மற்றும் South Bridge ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பை பேணுதல்.

02.  On Board VGA ஆக செயற்படல்


இதன் தொழிற்பாட்டில் ஏற்படும் பிரச்சினையால் நமக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்னவென்று பார்த்தால் 

01. CPU ஐ கண்டுபிடித்தல் ( CPU இல்லாதது போலான அதன் நடத்தை )

02. On Board VGA வேலை செய்யாமை (Beep Codes), Separate VGA ஐ Detect செய்யாமை அல்லது   Separate VGA இணைத்தவுடன் On Board VGA வேலை செய்தல். 

03. RAM ஐ Detect செய்யாமை  (Beep Codes)

04. Beep சத்தம் 

05. Power On ஆகாமை


REPAIR செய்வது எப்படி?

முதல் நான்கு பிரச்சினைகளையும் Hot Gun ஐ பாவித்து அதனை சூடாக்குவதன் மூலம் திருத்திக்கொள்ளலாம். ஆனால் இதனை சரியாக செய்வதாயின் அது மிக கஷ்டமான காரியம். கஷ்டம்னா அப்புடி ஒரு கஷ்டம். 

அப்போ இத எப்டி சரி பன்றது? இதானே உங்க கேள்வி? இத சரியான விதத்துல சரி செய்ய ஒரு கருவி வேனும். அத என்னால இன்னும் வாங்க முடியல. நான் இன்னும் சின்ன பையன்தானே! பெரியவனானதும் வாங்கிடுவேன். கருவிய கீழ பார்க்கலாம். 


கீழ இருக்கிற வீடியொவ பாருங்க. அதுல இருக்கு இந்த கருவிய எப்படி பாவிக்கிறதுன்னு... 




ஐந்தாவது பிரச்சினைய தீர்க்கனும்னா கட்டாயமா இந்த மெஷின் வேனும். காரணம் என்னன்னு பார்த்தா அதுல ஏற்பட்டிருக்க Short அ Replace பன்னனும். அப்பிடி Replace பன்ன நம்பர் கட்டாயமா ஒத்துபோகனும்.

Hot Gun மூலமா Heat பன்னனுமா இருந்தா BBQ போடுற மாதிரி சூடாக்கி பயன் இல்ல. Over Heat ஆகுனா Short ஆக வாய்ப்பிருக்கு. புரியுதா??



02. SOUTH BRIDGE  (I/O CONTROLLER HUB ICH )

என்ன தலைப்பதா பார்த்துட்டீங்களே! நா என்ன சொல்றது. நாம அடுத்து பார்க்க இருக்குற விஷயம் South Bridge சரியா???

இப்ப வாற தாய்ப்பலகைகல்ல இது இல்லாம North Bridge மட்டும் இருக்கலாம். ஆனா இதுக்கு முன்னாடி வந்த நிறைய தாய்ப்பலகைகல்ல இது இருக்கு.





சில வேலைகளில் Heat Sink பாவிச்சிருப்பாங்க. இதன் தொழிற்பாடுகல தலைப்பு போட்டு தனியா பார்க்க தேவையில்ல. PCI Slots மற்றும் ,USB ,Sound chip,Lan chip,BIOS rom,Sio Chip ,sata IDE Channel ற்கிடையில தொடர்ப்பை ஏற்படுத்துதல். 

இதன் தொழிற்பாட்டுல ஏதாவது பிரச்சினை வந்தா கீழ உள்ள பிரச்சினைகள்தான் பொதுவா வரும். 

01. Mother Board Power On ஆகாமை,

02. PCI ஸ்லாட் ,USB ,Sound chip,Lan chip போன்றவை detect ஆகாமல் போதல்

03. power On அகாமல் போதல் அல்லது அடிக்கடி Restart ஆதல்.

சரி இத எப்படி சரி செய்றதுனு பார்த்தா மேல பிரச்சினைக்கு என்ன தீர்வு சொன்னேனோ அதேதான் இங்கயும் செய்ய இருக்கு. ஆனால் இதுக்கு மேலதிகமா சந்தேகங்கள் கேள்விகள் இருந்தா எனக்கிட்ட தயங்காம கேளுங்க. நான் அதப்பத்தி இந்த பதிவுல பேசல காரணம் என் பிலாக்ல கருத்து பெட்டி எம்டியாத்தா இருக்கு. 



03. BIOS ROM


புதிதாக வரும் தாய்ப்பலகைகளில் மிக சிறிய பயோஸ் சிப் ஒன்றை காணலாம். இதன் தொழிற்பாடுகளை நாம் பார்த்தோமேயானால் 

01. முதல்தர இயங்குதளமாக செயற்படுதலுடன் கணினியில் உள்ள எல்லா வன்பொருட்களையும் தொடர்புபடுத்தல், இதன்போது கணினியில் இணைக்கப்பட்டுள்ள எல்லா வன்பொருட்களுக்கும் hardware id address வழங்குவதோடு தாய்ப்பலகையில் இணைக்கப்பட்டுள்ள எல்லா வன்பொருட்களையும் சோதனை செய்வதும் இதன் தொழிற்பாடுதான். இத மிக இலகுவா நினைவில வச்சிகனும்னா post அதாவது power on self test னு நினைவுல வச்சிக்கங்க. 

02. Configuration Settings அதாவது Bios Settings, பாஸ்வர்ட் ( Bios ல), Boot Device priority எல்லாத்தையும் Save செய்துகொள்வதும் இவரின் தொழிற்பாடுதான். 

இதப்பத்தி பேசுனா பேசிகிட்டே போகலாம், சந்தேகம் இருந்தா கேளுங்க. இல்லைன்னா கூகில் கடவுளின் கருணை உங்களுக்கு தேவைப்படலாம். 


சரி இப்ப பார்ப்போம் இவருக்கு பைத்தியம் பிடிச்சா என்னா நடக்கும்னு. 

01. தாய்ப்பலகைல எல்லாம் சரியா இருந்து எந்த பிரயோசனமும் இல்ல இவர் ஒழுங்கா இல்லாட்டி, இவர்ட செயற்பாடுகள வாசித்தாலே இது புரிஞ்சிருக்கும். ஆக குறைஞ்சது பீப் சத்தம் கூட வராது. 

02. Bios Save ஆகாமற்போதல். உதாரணமாக Time and Date etc. 

03. சரி அப்பிடியும் கணினிய நாம ஆன் பன்னிட்டா முதல் Display Screen லயே Struck ஆகி நிட்கும். 




இதுக்கு கொடுக்கப்படும் மருந்து எல்லோருக்கும் பொதுவா தெரியும்....

01. தாய்ப்பலகையில் உள்ள Battery ஐ கழற்றி சிறிது நேரம் போனதும் திருப்பி பிக்ஸ் பன்றது. 

02. இரண்டாவது முறைன்னா கொஞ்சம் கஷ்டமானது. 
  இதுக்கு சொல்றது பயோஸ் ரீலோட் (Bios Reload), இப்போதைக்கு இது போதும் பயோஸ் ரீலோட் (Bios Reload) பற்றி ஒரு தனி பதிவே எழுதலான்னு நினைக்கிறேன். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாம் இன்னும் இருப்பது தாய்பலகையின் பகுதிகளை இணம்காணும் பகுதியில் தான், இன்னும் அதனை திருத்தும் பகுதிக்கு செல்லவே இல்லை, சரி அடுத்தது என்னான்னு பார்ப்போம்.



04. Super I/O அல்லது SIO



Rectangle வடிவத்தில் 2.5 சென்றிமீற்றர் X 1.5 சென்றிமீற்றர் அளவுள்ள சாதாரண சிப் ஒன்று. இதே வடிவத்தில் தாய்ப்பலகையில் On Board Sound மற்றும் LAN ஆகியவை காணப்படுவதால், தவறாக இணங்காண வாய்ப்புகள் உண்டு. இலகுவாக இணங்காண வழி சொன்னா ITE,Winbond,Sms  போன்ற சொற்கள் அதன் மேல் எழுதப்பட்டிருக்கும். இதன் தொழிற்பாடுகள் என்னவென்று பார்த்தால்

01.  South Bridge Chip உடன் இணைந்து கணினியின்  Power on /off களை பேணிவருகின்றது. 

02. keyboard mouse floppy Disk போன்றவற்றை (இதெல்லாம் என்னன்னு மட்டும் கேட்டுறாதிங்க) LPT போர்ட்களை முகாமை செய்கின்றது. 





இதனால் வரும் பிரச்சினைகள் வெறும் இரண்டுதான். 

01. power On அகாமல் போதல் அல்லது அடிக்கடி Restart ஆதல். 

02. keyboard mouse floppy Disk, போன்றவற்றின் LPT போர்ட் வேலை செய்யாது போதல். 



இத சரி செய்யனும்னா re-sold பன்னி பார்க்கனும். ஆனால் தம்பி அதுவும் சரிவரலயோ, அத மாத்தனும்... 



ஆனா அதுக்கு ரொம்ப நல்ல அனுபவம் வேணும்.



 இப்படி இருந்து பத்தாது, Pin எத்தன இருக்குனு பாத்திங்க தானே? 64.. 


புதிய தாய்ப்பலகைகளில் இது சிறிதாகிக்கொண்டே போகின்றது. அப்போனா கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா நிறையப்பேருக்கு இந்த பிரச்சினை சரியா புரியாது. யேன்னா, நான் அடிக்கடி சொல்வேன்... முதல்ல ஷோர்ட் ஆகி இருக்கானு பாருங்க. ஐயொ, இதுக்கு முன்னாடி சொல்லாட்டியும் இனி சொல்லுவேன். 

சரி, ஷோர்ட் ஆகி இருக்கானு எப்பிடி பார்க்குறது??? காய்ச்சல் பார்க்குற தவிற வேற வழி இல்ல, 


ஐயோ, புரியாலயா? Heat ஆகியிருக்கானு பாருங்க. சாதாரணமா எதுவும் Heat அகுற அளவு இருக்குது இல்லையா? அதவிட Heat ஆகுனா அங்க ஷோர்ட் இருக்குனு அர்த்தம். 



06. CLOCK SIGNAL GENERATOR IC 


கண்ணா! பேர கேட்டாலே தெரியுதுல்ல? 




இதன் செயற்பாடு என்னான்னு நாம பேசுனா, தாய்ப்பலகைக்கு தேவையான digital pulse அல்லது  clock signal ஐ உருவாக்கி தாறதுதான் இதன்ட பொதுவான வேலை, 


சரி இது வேலை செய்யாட்டி என்ன நடக்கும். 



அதான்பா, தூங்கிரும். சரி இத எப்பிடி எழுப்புறது????





மேல படத்த பாருங்க. இடது பக்கத்துல உள்ள பகுதிக்கு சொல்றது Cristal னு, ஆ... இதுதான் ஐ.சீ 'ய  Oscillate பன்றது. electronic செய்றவங்களுக்கு இதப்பத்தி தெளிவா புரியும்.  Cristal சரியா வேலை செய்யாட்டி இது செயழிலந்து போகும். அதனால முதல்ல அத மாத்தி பாருங்க. அப்பிடி உங்க அதிஷ்டத்திற்கு சரி வந்துட்டா உங்க கம்பியூட்டர் கீழ இருக்குற குரங்கு மாதிரி சந்தோஷமா பாட்டு பாடிகிட்டுதான் இருக்கும். 






நான் ஏன் உங்க கணினிய குரங்குனு சொல்றேன் என்று முடிஞ்சா கெஸ் பன்னி அதயாவது கருத்து பெட்டியில் போடுங்க. 

நா திரும்பவும் சொல்றேன்.



அப்பறம் முக்கியமான விஷயம் இந்த பதிவு இன்னும் முடியல, பகுதி 02 முடிந்தளவு சீக்கிரமா தாறேன்.