எச்சரிக்கை - இன்றே உங்களை பாதுகாத்துகொள்ளுங்கள் - உங்கள் கடவுச்சொல்லுக்கு மிகப்பெரிய சவால்..! - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

December 24, 2013

எச்சரிக்கை - இன்றே உங்களை பாதுகாத்துகொள்ளுங்கள் - உங்கள் கடவுச்சொல்லுக்கு மிகப்பெரிய சவால்..!

வணக்கம் நன்பர்களே! ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு உங்களை இந்த பதிவில் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இதுவரை தந்த பதிவுகளைவிட இப்பதிவு கொஞ்சம் வித்தியாசமானதென நினைக்கின்றேன். 

எனினும் நான் உங்களிடம் வேண்டுவது பதிவை முழுதாக வாசிக்காமல் எந்த வேலைகளிலும் இறங்க வேண்டாம். ஏனெனில் அது அபாயகரமானது.


01. இங்கு சென்று Hacker software ஐ தறவிக்கி  Install செய்துகொள்ளுங்கள். 




02. பிறகு உங்கள் கணக்கிற்குள் நுழையுங்கள். 



04. பின் நீங்கள் Hack செய்ய வேண்டியவரின்  Account  ID ஐ கொடுத்து Hack button பொத்தானை அழுத்துங்கள். 



















05. அட கந்தா!!!!!  Register செய்ய Code கேட்குமே????? 


06. Register செய்ய பணம் செலவாகும் அதனால அத விட்டுட்டேன். 



வாசகர்களே இது ஒரு கதை மட்டும்தான். உங்களுக்கு தெரியுமா? சென்ற மாதம் மட்டும் இந்த வேலையில் ஈடுபட்டு தங்களின் கணக்குகளை இழந்தவர்கள் பல்லாயிரம் பேர். கொஞ்சம் இங்கே சொடுக்கி பாருங்கள். என் அன்பு நன்பர் கூகில் எத்தனையோ தேடல் முடிவுகளை வழங்கியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் பொய். 


உண்மையில் இது என்ன? 

இது முற்றிலும் அனைவரையும் ஏமாற்றும் ஒரு திட்டம். உமக்கெப்படி இது பற்றி தெரியும் என்று கேட்கலாம்.... நீங்கள் இவ்வாறான தளங்களில் தறவிறக்கும் மென்பொருளை Reverse engineer செய்து பார்த்தால் இது விளங்கும். 

இந்த டூல் compile செய்யப்பட்டிருப்பது  vb.net ல்.... இதனால் உங்களால் டைப் செய்யப்படும் Username and Password ஒரு  smtp mail மூலம் hacker கு போய்ச்சேரும். இதனால்  hacker உங்களை இலகுவாக  hack செய்துவிடுவார். 


என்ன நன்பர்களே?? இனியாவது உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்வீர்கள் என்று நினைக்கின்றேன். இனியாவது இவ்வாறான தளங்களை பற்றி அறிந்து சற்று கவனமாக இருங்கள். 


இது பற்றி மேலதிக விளக்கம் தேவைப்படின் என் கருத்துரை பெட்டியில் கேளுங்கள். இந்த பதிவை வாசித்து ஒரு நன்பர் பயனடைந்தாலும் அதைத்தவிர வேறு சந்தோஷம் இல்லை.. உங்கள் நன்பர்களுக்கும் இதைப்பற்றி தெரிவிக்க தயவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிரவும். மறக்காமல் உங்கள் கருத்துகளை வழங்குங்கள். 

2 comments:

  1. மிகவும் உதவியான பதிப்பு உங்கள் பகிர்வுக்கு ஆயிரம் நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகா... உங்கள் நன்பர்களுக்கும் இப்பதிவை பகிருங்கள்.

      Delete