இவர்கள் யார் (தெரிந்துகொள்ள சில விடயங்கள்) - Tamilish Hacker

Latest Photos

Webp-net-gifmaker

July 28, 2012

இவர்கள் யார் (தெரிந்துகொள்ள சில விடயங்கள்)

முதல் பதிவில் உங்களுக்கான ஹக்கிங் Lab உருவாக்குவது எப்படி? என்று கூறிச்சென்றேன். அதன்படி ஹக்கிங் Lab உருவாக்கிவிட்டால் போதுமா? ஹக்கிங் செய்ய ஹக்கிங் பற்றி சிறிதேனும் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதைப்பற்றி இன்று கூறலாம் என நினைக்கின்றேன். 






Black Hat
பெயரை கேட்டவுடனே சில நேரங்களில் உங்களுக்கே புரிந்திருக்கும் ஹக்கிங் உலகத்தில் இவர்கள் கெட்ட செயல்களை புரிபவர்கள் எனலாம். அவர்களிடத்து எப்பொழுதும் நல்ல எண்ணங்கள் கிடையாது. இவர்கள் எப்பொழுதும் மற்றயவர்களின் விடங்களை கொள்ளையிட அல்லது அவரின் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளவே நினைப்பார்கள்.




இவர்கள்தான் வங்கி, கடனட்டை, தளங்கள் மற்றும் கம்பனிகளின் உள்ளே புகுந்து களவாடி தரவுகளை பெற்றுக்கொள்பவர்கள். ஆனால் இவ்வளவு வேலையும் செய்ய இவர்கள் மிக புத்திசாலிகள்.




White Hat
இவர்களை பற்றி நான் சொல்லத்தேவையில்லை என நினைக்கிறேன். ஹக்கிங் உலகில் நல்ல விடயங்களுக்காக மட்டும் ஹக்கிங் செயல்களை புரிபவர்கள். காரணம் மேலே Black Hat களுக்கு மாறாக நல்ல எண்ணங்கள் தோன்றும் மனதை கொண்டவர்கள்.




Script Kiddie
இவர்களைப்பற்றியும் சொல்ல தேவையில்லை ஏனெனில் உங்களைபற்றி உங்களுக்கு தெரியாதா? என்ன பாக்குறீங்க? நீங்கதான் Script Kiddie ஸ். ஹக்கிங் பற்றி கற்றுக்கொள்ள முயலும் அனைவரும்  Script Kiddie ஸ் என அழைக்கப்படுவர்.




ஆனால் நீங்கள் இவ்வாறுதான் என கூற முடியாது, காரணம் இவர்கள் தனியே அல்லது சுயமாக எதையும் கற்று புதிதாக எதையும் யோசனை செய்து செய்பவர்கள் அல்ல. மற்றயவர்கள் செய்த அப்லிகேஷன்ஸ் கொண்டு ஹக்கிங் செயல்களை புரிபவர்கள் இவர்கள். இவர்களுக்கு இதனால் எந்த பயனும் கிடைக்காது என இவர்களுக்கே தெரியாது என்பது மட்டும் நன்றாக தெரியும்.








Intermidiate Hackers
இவர்கள் யார் என்று தெரியுமா? Script Kiddie ஐ விட சிறிது முன் உள்ளவர்கள். இவர்களுக்கு 50 வீத Programming Knowladge  உள்ளவர்கள். இவர்களுக்கு தானாகவே ஒரு அப்லிகேஷனை உருவாக்கிகொள்ள முடியும். இவர்களால் பெரிய செயல்கள் ஏதும் புரிய இயலாது.








Elite Hackers
இவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? இவர்களுக்கு நான் வழங்கும் பெயர் ஹக்கிங் உலகின் ஜாம்பவான்களே! பொதுவாக அனைத்து விடயங்களிலும் புகுந்து உலகை கலக்கிக்கொண்டிருக்கும் மிக சிறந்த நுட்பங்களை கொண்ட ஹக்கர்கள் இவர்கள். Script Kiddie களுக்கும் இவர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஆனால் அது ஒற்றுமை அல்ல. என்னவென்றால் Script Kiddie கள் அப்லிகேஷன்களை உருவாக்கி பாவிக்க மாட்டார்கள். இவர்களும் அவ்வாறேதான் அப்லிகேஷன்களை உருவாக்கி பாவிக்க மாட்டார்கள். ஆனால் அப்லிகேஷன்ஸ் இல்லாமலே சாதிக்க கூடியவர்கள்.




Elite Hackers ன் பண்புகள்




01. இவர்கள் எப்பொழுதும் ஒரு புதிய விடயத்தை கொண்டே பிரச்சினைகளை தீர்ப்பர். அவ்வாறு பிரச்சினைகளை தீர்க்கும் போது இவர்களிடத்து பெரிய சக்தி செலவிடப்படுகின்றது. அதனால் அவர்களுக்கு கடைப்பது ஒரு மகிழ்ச்சி மட்டுமே. ஆனால் இவர்கள் அனுமன் போல, அவர்களின் சக்தியை அவர்களே அறிவதில்லை.




02. இவர்களால் பிரச்சினையை மிக சரியாக தீர்ப்பர். இவர்கள் எந்த நேரமும் அனுதினம் வாழ்வில் எந்த வேலையிலும் ஒரு ஹக்கராகவே அனைவருக்கும் தோன்றுவர்.




03. இவர்களுக்கு கஷ்டப்படுவது பிடிக்காது. அது அவர்களுக்கு சரியாக ஒரு எதிரி போலவே ஆகும். அவர்கள் செய்வது மிக இலகுவாக எதையும் செய்துகொள்ளவே ஆகும்.




04. அவர்கள் செய்வது அவர்களுக்கு முடிந்த விடயங்களை மட்டுமே ஆகும். அத்துடன் அவர்களுக்கு யாரிடத்திலும் அல்லது யாருக்கும் அடிபணிந்து வேலை செய்வது  பிடிக்காது. அனைத்தும் தன்னுடையதாகவும் அத்துடன் புதிதாகவும் யாரும் எதிர்பார்காத நேரத்தில் செய்வதே  பிடிக்கும்.


நான் நினைக்கின்றேன் இப்பதிவில் சிறிதேனும் ஹக்கிங் பற்றி அறிவை பெற்றிருப்பீர்கள் என்று. தெடர்ந்தும் இணைந்திருங்கள்.......









No comments:

Post a Comment